Saturday, 4 October 2025

அவள்-5

ஒத்து வந்த பலவற்றிக்காக, ஒத்து வராத ஒன்றை,இரட்டை,மூன்றை எப்படி மனதை ஏற்றுக்கொள்ள வைப்பது.???!!!

சுடும் சொற்களை சோற்றுடன் சேர்ந்து
விழுங்க நினைத்து, மீன் முள் போல் தொண்டையில் சிக்கி
தினம் தினம் தொந்தரவு செய்கிறது.

ஈரத்துனியால் அழித்து புதிதாக்கப்படும்
கரும்பலகை போல மனமும் தினம் புதியதானால், கடந்த கால ரணங்களின் நெருக்கடியில் இருந்து கொஞ்சம் தப்பித்து கொள்ளலாம்.

எப்போதோ உணர்ந்த அன்பின் நெடியோடு
வழங்கும் அன்பு வந்து சேரும் ஓர் நாள், என்ற நினைவோடு, கணத்த இதயத்துடன் காலத்தை கடத்தும் பல மாதறின் கல்யாண பந்த காதல் ஊசலாடுகிறது.

Saturday, 27 September 2025

A Day in Her Diary!

 I'm fine somehow, running behind the days, and it goes by.

I'm trying to chase it for my rhythm, but I couldn't.

I am trying. yes, feel exhausted, overwhelmed. Trying to steach myself as far as i can.

Im doing it. hope so one day ive gone through this phase.

Here have to accept one thing that, being mother is tough, being homemaker is actually toughest job.

If i gone through this, sure I'll get the confidence to conquer anything.

Amen!

அவள்-4

 அவள் நாட்குறிப்பில் ஒரு நாள் 

எப்படியோ நன்றாக இருக்கிறேன், நாட்கள் பின்னால் ஓடுகிறேன், அது கடந்து செல்கிறது. 

நான் அதை என் தாளத்திற்காக துரத்த முயற்சிக்கிறேன், ஆனால் முடியவில்லை.

 நான் முயற்சி செய்கிறேன். ஆம், நான் சோர்வாக உணர்கிறேன், அதிகமாக உணர்கிறேன். என்னால் இயன்ற வரையில் என்னைத் தேற்றிக் கொள்ள முயல்கிறேன்.

நான் அதைச் செய்கிறேன், ஒரு நாள் இந்தக் கட்டத்தைக் கடந்திருப்பேன் என்று நம்புகிறேன். 

இங்கே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், தாயாக இருப்பது கடினமானது, இல்லத்தரசியாக இருப்பது உண்மையில் கடினமான வேலை. 

நான் இதை கடந்து சென்றால், எதையும் வெல்லும் தன்னம்பிக்கை நிச்சயம் கிடைக்கும்.

Saturday, 30 August 2025

அவள்-3 அவளுக்கு பிடிக்கும்

 அதிகாலை தேநீர் 

தோழியின் குறுஞ்செய்தி 

தோட்டத்து மலர்களால் ஒரு 

சிறு புன்னகை 

தூரத்தில் ஒலிக்கும் பாடலில் 

பிடித்த வரிகள் 

இரவில் மழை மண் வாசம் 

அவளுக்கு பிடிக்கும் 

அவள் மனதை நிறைக்கும்.

Sunday, 10 August 2025

அவள் -2

அவளால் செய்ய முடிந்த நல்ல விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?

தடித்த வார்த்தைகள் முட்களை போல
இன்னும் இன்னும் தைக்கின்றன.


மறக்க நினைக்கும் சண்டைகளுக்கூடான
நிகழ்வுகள் மட்டும் ரணமாகிக் கிடக்கின்றன.
அவளின் தவறுதான் என்ன?


மகிழ்ந்திருக்க ஒரு சிறு துரும்பு காரணமும்
கிடைக்காமல் தேடித்தேடி மனமே மனதை துளைக்கிறது.


கொஞ்சம் பேசி நெஞ்சம் மகிழ்ந்து
அயர்ந்து தூங்க ஆசை கொள்கிறது
அவள் மனது.

Friday, 8 August 2025

அவள்

 அவள் தனிமையில் இல்லை.

அவள் செடிகளோடு பேச தெரிந்தவள்.
மலர்களின் மணத்தால் மனதை நிறைத்துக்கொள்பவள்.
துளிர்க்கும் சிறு அரும்பும் அவள்
நம்பிக்கை போல செழித்து வளர்ந்தோங்குகிறது.

பாத்திரங்களின் இரைச்சலில் அவள் விம்மலையும்
கழுவும் தண்ணீரினூடே கண்ணீரையும்
கரைத்து கடத்த முனைபவள்.
அவள் தனிமையில் இல்லை.

வகுப்புத்தோழிகளின் நினைவுகளோடு தினமும் சிரிக்கிறாள்.
ஏதோ பாடல்களினால் செவிகளை நிறைத்துக் கொள்கிறாள்.

உள்ளம் உடைந்து வெடித்து கிளம்புகையில்
தன் கைகளால் தன்னையே வளைத்து அணைத்துக் கொள்கிறாள்.
அவள் தனிமையில் இல்லை.

Saturday, 26 July 2025

தண்ணீர் சுமக்க தயாரா?

ரெபேக்காளை போல பலுகி பெருகனும், சீமாட்டியாக வாழனும்னு எல்லா பெண்களுக்கும் ஆசைதான். ஆனால் அதே ரெபேக்காளை போல ஊர் பேர் தெரியாத வழிப்போக்கருக்கும் அவர் ஒட்டகங்களுக்கும் சேர்த்து கிணற்றில் தண்ணீர் இரைக்க இன்று எத்தனை பேர் தயாராக இருப்பாங்க...,?!??

அவள் சோம்பி திரிபவள் அல்ல. குற்றம் குறை கூறி அலுத்துக் கொள்பவளும் அல்ல.
ரெபேக்காள் தான் செய்யும் காரியங்களை மனதார செய்தாள்.
கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.
இன்றைக்கு நாமும் நமக்கு நேரிடும் காரியங்களை முழுமனதோடு செய்கிறோமா?

Saturday, 19 July 2025

Bible

 What is the best one, precious one I have in the whole world is "Bible". 

I'm gonna read it again and again.

I'm gonna keep it. 

Ruth

But Ruth clung to her(Mother in law).

​Her mother in law Naomi realized, "Ruth was determined".

​Naomi Said to her, "Go ahead, my daughter".

​Ruth  "She had worked steadily from morning till now".


Speaking Sentences

 அன்பை பழக்கமாக்கிக் கொள்வோம்.

Plan your day, Unless the day will plan for you.

ஒரு சிறு அடி எடுத்து வைப்பேன். கர்த்தர் நடத்துவார். 


அவள்-5

ஒத்து வந்த பலவற்றிக்காக, ஒத்து வராத ஒன்றை,இரட்டை,மூன்றை எப்படி மனதை ஏற்றுக்கொள்ள வைப்பது.???!!! சுடும் சொற்களை சோற்றுடன் சேர்ந்து விழுங்க ...