Saturday, 4 October 2025

அவள்-5

ஒத்து வந்த பலவற்றிக்காக, ஒத்து வராத ஒன்றை,இரட்டை,மூன்றை எப்படி மனதை ஏற்றுக்கொள்ள வைப்பது.???!!!

சுடும் சொற்களை சோற்றுடன் சேர்ந்து
விழுங்க நினைத்து, மீன் முள் போல் தொண்டையில் சிக்கி
தினம் தினம் தொந்தரவு செய்கிறது.

ஈரத்துனியால் அழித்து புதிதாக்கப்படும்
கரும்பலகை போல மனமும் தினம் புதியதானால், கடந்த கால ரணங்களின் நெருக்கடியில் இருந்து கொஞ்சம் தப்பித்து கொள்ளலாம்.

எப்போதோ உணர்ந்த அன்பின் நெடியோடு
வழங்கும் அன்பு வந்து சேரும் ஓர் நாள், என்ற நினைவோடு, கணத்த இதயத்துடன் காலத்தை கடத்தும் பல மாதறின் கல்யாண பந்த காதல் ஊசலாடுகிறது.

அவள்-5

ஒத்து வந்த பலவற்றிக்காக, ஒத்து வராத ஒன்றை,இரட்டை,மூன்றை எப்படி மனதை ஏற்றுக்கொள்ள வைப்பது.???!!! சுடும் சொற்களை சோற்றுடன் சேர்ந்து விழுங்க ...