Sunday, 10 August 2025

அவள் -2

அவளால் செய்ய முடிந்த நல்ல விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?

தடித்த வார்த்தைகள் முட்களை போல
இன்னும் இன்னும் தைக்கின்றன.


மறக்க நினைக்கும் சண்டைகளுக்கூடான
நிகழ்வுகள் மட்டும் ரணமாகிக் கிடக்கின்றன.
அவளின் தவறுதான் என்ன?


மகிழ்ந்திருக்க ஒரு சிறு துரும்பு காரணமும்
கிடைக்காமல் தேடித்தேடி மனமே மனதை துளைக்கிறது.


கொஞ்சம் பேசி நெஞ்சம் மகிழ்ந்து
அயர்ந்து தூங்க ஆசை கொள்கிறது
அவள் மனது.

No comments:

Post a Comment

அவள்-3 அவளுக்கு பிடிக்கும்

 அதிகாலை தேநீர்  தோழியின் குறுஞ்செய்தி  தோட்டத்து மலர்களால் ஒரு  சிறு புன்னகை  தூரத்தில் ஒலிக்கும் பாடலில்  பிடித்த வரிகள்  இரவில் மழை மண் வ...