அவள் தனிமையில் இல்லை.
அவள் செடிகளோடு பேச தெரிந்தவள்.
மலர்களின் மணத்தால் மனதை நிறைத்துக்கொள்பவள்.
துளிர்க்கும் சிறு அரும்பும் அவள்
நம்பிக்கை போல செழித்து வளர்ந்தோங்குகிறது.
பாத்திரங்களின் இரைச்சலில் அவள் விம்மலையும்
கழுவும் தண்ணீரினூடே கண்ணீரையும்
கரைத்து கடத்த முனைபவள்.
அவள் தனிமையில் இல்லை.
வகுப்புத்தோழிகளின் நினைவுகளோடு தினமும் சிரிக்கிறாள்.
ஏதோ பாடல்களினால் செவிகளை நிறைத்துக் கொள்கிறாள்.
உள்ளம் உடைந்து வெடித்து கிளம்புகையில்
தன் கைகளால் தன்னையே வளைத்து அணைத்துக் கொள்கிறாள்.
அவள் தனிமையில் இல்லை.
No comments:
Post a Comment